
சிறு சோளத்தில் நம் உடலுக்கு தேவையான புரட்சத்து இருக்கிறது என மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார் இதன் மாவில் தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
சோளம் என்று சொன்னாலே பலருக்கும் நினைவில் வருவது மக்காச்சோளமாக தான் இருக்கும் ஆனால் மக்காச்சோளம் என்பது புதிதாக வந்த வீரிய ஒட்டு ரக சோளம் தான் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார் இவை சுவையாக இருக்குமே தவிர பெருமளவு பயனை தராது என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் நம் பாரம்பரிய முறைப்படி சிறுசோளம் தான் நீண்ட நாட்களாக வழக்கத்தில் இருந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். முன்னர் ஒரு காலத்தில் இந்த சிறு சோளத்தை தினசரி உணவாக மக்கள் எடுத்துக் கொண்டனர் தற்போதைய சூழலில் சிறு சோளத்தை கிராமப் பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனமாக தான் பயன்படுத்தி வருகின்றன சிறு சோளத்தில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது பல குழந்தைகளுக்கு சிறுவயதில் அதிகமாக சளி பிடிப்பது இருமல் வருவது போன்றவைகளுக்கு புறம் சத்து குறைபாடு தான் காரணம் அதன் அடிப்படையில் தேவையான அளவு புரதச்சத்து சிறுசோளத்தில் இருக்கிறது. அதன் அடிப்படையில் சிறு சோளத்தை மாவாக மாற்றி ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொள்ளலாம் குறிப்பாக சோழ மாவுடன் உளுந்த மாவையும் சேர்த்து தோசையாக சுட்டு சாப்பிடலாம் சிறு சோள மாவு சேர்த்து சுடும் தோசை இயல்பாகவே மொறுமொறுப்பாக வரும் தன்மையுடையது எனவே குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள் அது மட்டுமல்லாமல் சிறு சோளத்தில் பணியாரம் செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு விருப்பமாக இருக்கும் அதன்படி ஆரோக்கியமான உணவுகளை சுவையாக சமைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம்..!!