உடலுக்கு நன்மை தரும் புளிச்சக்கீரை சட்னி..!! சுவையாக செய்ய ஒரு அருமையான செய்முறை..!!

நமது உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் புளிச்சக்கீரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து நிறைய கிடைக்கிறது. ஆகையால் ரத்தத்தை சுத்தம் செய்யும் குணம் இதில் இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் இது நம்மை சரி செய்யும். அந்த வகையில் இன்று புளிச்சக்கீரை சட்னியை எப்படி செய்வது என்று காண்போம்.

தேவையானவை: 

புளிச்ச கீரை – நான்கு கப்,
தனியா, மிளகாய் தூள் – தலா ஒரு கரண்டி,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
வேர்கடலை தூள் – இரண்டு கரண்டி,
சர்க்கரை மற்றும் பெருங்காயம் – சிறிதளவு,
கடுகு உளுந்து – தாளிப்பதற்கு..

செய்முறை: 

முதலில் புளிச்சக்கீரையை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். அடுத்து தனியா மிளகாய் தூள் மற்றும் புளிச்ச கீரையை அடுத்தடுத்து சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதில் பெருங்காயம் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் அதனை எடுத்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான புடிச்ச கீரை சட்னி தயார்.

Read Previous

அகத்திக்கீரை சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இட்லி சாப்பிட்டு இருப்பீர்கள்..!! இளநீரில் இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular