
உடலுறவின்போது அதீத வலி ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை குறித்தும் மருத்துவர் கூறியுள்ளார்…
உடலுறவின்போது பெண்களுக்கு எதனால் அதிக வலி ஏற்படுகிறது என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார் அதன்படி பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை vaginismus என கூறுவார்கள். பெண்களின் பிறப்புறுப்பின் தசைகள் இறுக்கமாகும் போது உடலுறவில் இவ்வாறு வலி ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்..
மன அழுத்தம் சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்புகள் பயம் உடலுறவு குறித்து போதிய புரிதல் இல்லாத காரணங்களால் இதுபோன்ற பிரச்சனை ஏற்படும் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இவற்றை தடுப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார். சில உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் இதனை தடுக்க முடியும் அந்த வகையில் பெல்விக் தசைகளை சுமார் 15 முதல் 20 வினாடிகள் இறுக்கமாக வைத்து பின்னர் அவற்றை சாதாரண நிலைக்கு கொண்டு வரலாம். ஒரு நாளைக்கு இவ்வாறு பதினைந்து முதல் 28 முறை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல ஒரு நாளில் குறைந்த பட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம் இவை உடலில் தசை இயக்கவியலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமைவது மட்டுமின்றி மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது என மருத்துவர் கூறினார். எனினும் இந்த பிரச்சனையை தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என மருத்துவர் கூறியுள்ளார்..!!