
தாம்பத்தியம் என்பது திருமண வாழ்வில் ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தும். திருமணமான தம்பதியினர் தினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன மற்றும் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமணமான தம்பதிகள் அடிக்கடி உடலுறவு கொள்வதன் மூலம் இருவருடைய இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு உடலுறவு கொள்வதன் மூலம் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும். ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதன் மூலம் மாரடைப்பிலிருந்து கூட தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் திருமணம் ஆன தம்பதியினர் இவ்வாறு அடிக்கடி உடலுறவு கொள்வதன் மூலம் மன அழுத்தம் தேவையில்லாத சோர்வு போன்ற பிரச்சனைகள் எல்லாம் வராது. தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆம் தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் எண்பது சதவீத கலோரிகள் கரைந்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது. அதுமட்டுமன்றி மிக முக்கியமாக தம்பதியினர் இருவருக்கும் இடையே பரஸ்பர நெருக்கத்தையும் அன்பையும் இந்த உடலுறவு ஏற்படுத்துகிறது. தினமும் உடலுறவு செய்வதன் மூலம் தூக்கம் சம்பந்தமான தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம்.