
உடலை வலுவாக்கும் உளுந்து பால் கட்டாயம் குடிங்க..!! உளுந்து பாலின் ஆரோக்கிய நன்மைகள் இவைதான்..!!
உளுந்து பாலில் எக்கச்சக்கமான நன்மைகள் ஒளிந்துள்ளது. ஆனால் அது நம் பலருக்கும் தெரியாது. என் நிலையில் உளுந்து பால் எப்படி பண்ணுவது என்றும் உளுந்து பாலின் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கால் டம்ளர் உளுந்து எடுத்துக் கொள்ளவும். அதை கழுவி விட்டு குக்கரில் போட்டு 11/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஆறவைத்து மிக்ஸியில் நைசாக நன்று அரைத்துக் கொள்ளவும். பிறப்பு கொஞ்சம் தண்ணீர் விட்டு நாட்டுச்சர்க்கரை போட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு டம்ளர் பால் அல்லது தேங்காய் பால் விட்டு கொதிக்க விட்டு இறக்கவும். தேவைப்பட்டால் தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் துருவல் கூட ஆட் பண்ணிக்கலாம். அவ்வளவுதான் சுவையான உளுந்து பால் தயார். பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவரும் இந்த உளுந்து பாலை குடிக்கலாம்.
உளுந்து பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தற்போது பார்க்கலாம்:
உளுந்து பாலில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது குடிப்பதால் பெண்களுக்கு இடுப்பு வலி குறையும். மற்றும் மாதவிடாய் கோளாறு போன்றவற்றை நீக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிப்பதற்கு உளுந்து பால் குடிக்கலாம். நரம்பு மண்டலம் வலிமை பெறும். மற்றும் ஆண் பெண் இருபாலருக்கும் மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கு இந்த உளுந்து பாலை குடிக்கலாம்.