உடலை வலுவாக்கும் முருங்கைக் கீரையின் அற்புத பயன்கள்..!!

“முருங்கை வைத்தவன் வெறுங்கையில் நடப்பான்” என்ற பழமொழியை கேட்டு இருப்போம். அதற்கு ஏற்றபடி முருங்கைக் கீரையை தினமும் உண்டு வருவதால் வயதான காலத்திலும் தடி,குச்சி  போன்ற எந்த ஒரு உதவியும் இன்றி தனியாக நடக்கலாம் என்பதை இதன் பொருளாகும்.

அதன்படி கிராமங்களில் எளிதாக கிடைக்கும் இந்த முருங்கைக் கீரையை தினமும் உண்டு  வருவதால் உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதன்படி முருங்கை கீரையை பொரியல், கூட்டு, சாம்பார் மற்றும் தேனீர் என எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. அதிலும் முருங்கை மரத்தில் உள்ள இலை, காய், பூ என்ற அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டது.

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க முடியும். மேலும் மனதில் ஏற்படும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். குறிப்பாக சோயாசை போலவே முருங்கைக்கீரையும் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வரலாம் .

அது போல பலவித நன்மைகளைக் கொண்ட இந்த முருங்கைக் கீரையில் மனிதர்களுக்கு தேவையான 20 அமினோ அமிலங்கள்  உள்ளது. ஆண்களுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சி குறைபாட்டை சரி செய்ய முருங்கை கீரை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் சரியாகும் என்று கூறப்படுகிறது. இதே போல உடலை வலுவாக்கவும் இது உதவி செய்கிறது.

Read Previous

அடடா இவ்வளவு சத்துக்கள் உடையதா நிலக்கடலை..!! இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே..!!

Read Next

ஏழு நாட்களில் சிறுநீரக கற்களை காணாமல் செய்யும் அற்புத மூலிகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular