இந்த நவீன காலகட்டத்தில் மக்கள் அனைவரும் சத்தான உணவு முறையை பின்பற்றாமல், கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் சாப்பிட்டு உடல் எடையை கூட்டி வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ஒரு சிலர் உடல் எடையை எவ்வாறு இளைப்பது என்று தெரியாமலும் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கொள்ளு என்பது அதிக சத்துக்களை கொண்ட ஒரு பயிராகும். கொடுத்தவனுக்கு கொள்ளு இலைத்தவனுக்கு எள்ளு என்று பெரியோர்கள் அந்த காலத்திலேயே பழமொழி போல் சொல்லி இருக்கிறார்கள். ஆம் உடல் எடையை குறைப்பவர்களுக்கு கொள்ளு ஒரு சிறந்த உடல் எடை குறைக்கும் காரணியாக விளங்குகிறது. உடல் எடையை கூட்ட நினைப்பவர்களுக்கு எள்ளு ஒரு சிறந்த காரணியாக விளங்குகிறது. பொதுவாகவே குதிரைக்கு உணவாக இந்த கொள்ளை கொடுப்பார்கள். குதிரை நீண்ட நேரம் வேகமாக ஓடுவதற்கு உண்டான ஆற்றலை இந்த கொள்ளு தருகிறது.
இந்த வகையில் உடல் பருமன் குறைய நினைப்பவர்களும் இந்த கொள்ளு பயிரை சாப்பிடலாம். எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் அதிகமான சட்டை தரக்கூடியது தான் இந்த கொள்ளு. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க இது மிகவும் உதவுகிறது. கொள்ளு பருப்பை நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நமது உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் எடை குறைய இது உதவுகிறது. தக்காளி ரசம் பருப்பு ரசம் ஒன்று நம் வீட்டில் வைக்கப்படுவதில் இந்த கொள்ளு ரசம் ஒன்று. கொள்ளு ரசம் குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு அதில் ஒன்றுதான் இந்த உடல் எடை குறைப்பு. சிலர் கொள்ளை சூப் செய்தும் சாப்பிடுவார்கள்.




