உங்களுடைய உடல் எடை குறைக்க வேண்டுமா இதோ கொள்ளு பணியாரம்…
காலை உணவு என்றாலே இட்லி தோசை என்றாகிவிட்டது என்று வருத்தப்படுகிறீர்களா சத்தான உணவினை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அது உடல் எடையை அதிகரித்து விட கூடாது என்றும் என்னும் நபராக நீங்கள் இதோ உங்களுக்கு, சிறுதானியங்களில் ஒன்றான இந்த கொள்ளு குதிரைகளுக்கு உணவாக கொடுக்கக்கூடிய ஒரு உணவு ஏனெனில் இதில் மூட்டு எலும்புகளுக்கு வலு சேர்க்கும் திறன் நிறைந்துள்ளது அதேபோல் இதனை நாம் தொடர்ந்து உட்கொண்டால் உடல் எடை கணிசமாக குறையும், அந்த வகையில் பெரும்பாலும் கொள்ளை உட்கொள்ளும் மக்கள் அதனை அவித்து சாப்பிடுவார்கள் ஆனால் இதனை வைத்து ஒரு சுவையான பணியாரம் செய்து அதனை காலை உணவாக உட்கொள்ளலாம் என்பதை தான் இப்பதிவில் எடுத்துரைக்கிறோம், ஆரோக்கியம் மற்றும் சுவை மிக்க கொள்ளு பணியாரம் செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
* பச்சரிசி மாவு ஒரு கப்
* கொள்ளு ஒன்றரை கப்
* உளுத்தம் பருப்பு முக்கால் கப்
* ஒரு ஸ்பூன் வெந்தயம்
* உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர்
* அனைத்தும் ஊறவைத்து அரைப்பதற்கான பொருட்களாகும்
இதர பொருட்கள் : கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் சிறிதளவு வெங்காயத்தூள் ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று பொடியாக நறுக்கிய இஞ்சி சிறு துண்டு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சிறிதளவு எடுத்துக் கொள்ளவும், முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இட்லிய அரிசி கொள்ளு உளுத்தம் பருப்பு வெந்தயம் ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை கழுவி எடுத்து சுமார் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள், அதைத் தொடர்ந்து ஊறவைத்த பொருட்களை எடுத்து வடிகட்டி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சிறிதளவு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும், பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் வதங்கி வந்ததும் அதில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அதனை வதக்கி கொள்ளுங்கள், வதக்கி எடுத்த பொருட்களை நாம் மறைத்து வைத்துள்ள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும் இறுதியில் பணியார கல்லை எடுத்து அதன் குழியில் எண்ணெய் தடவி அதில் பணியாரம் அதை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு பணியாரம் தயார்..!!




