இன்றைய காலகட்டங்களில் உடல் எடையை குறைப்பதற்கு எத்தனையோ உடற்பயிற்சிகளும் உணவு பழக்க வழக்கங்களையும் கடைபிடித்து வருகிறோம், அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு முறை மற்றும் பழங்களினால் உடல் எடை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான உடல் மகிழ்ச்சியான வாழ்வுக்கு திறவுகோல், சீரற்ற உணவு பழக்கத்தினால் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் உடலில் நோய் உண்டாகும், உடல் எடை குறைப்பதற்கு உணவை காட்டிலும் பழம் முக்கிய பங்கு வைக்கிறது சில பழங்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைத்து விடுகிறது, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கொய்யாப்பழமானது நமது சுற்று வட்டார பகுதியில் கிடைக்கும், இவை செரிமான பிரச்சனை நீக்குவது மட்டுமல்லாமல் கொய்யா பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதனால் உடல் எடையை குறைக்க செய்கிறது, தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் இருந்து விலகி இருக்கலாம் என்பது மருத்துவ கூற்றாக இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து மட்டும் பீட்டா சத்து நிறைந்திருப்பதனால் உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வைக்கிறது, மேலும் பெரி வகைகளில் ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்கள் அதிகமாக இருப்பதனால் இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து எடையை குறைக்க செய்கிறது, மேலும் திராட்சை, தர்ப்பூசணி, ஆரஞ்சு பழ வகைகள் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும், மற்றும் நார்ச்சத்துக்களை தந்து உடல் எடையை குறைக்க செய்கிறது..!!