
உடல் எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய ஆறு பலன்கள் எவை தெரியுமா உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பின்வரும் பழங்களை தங்களுடைய உணவு முறையில் சேர்த்துக்கள்ளலாம்.
ஆப்பிள் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள்களை சாப்பிடலாம் இது உங்களுடைய கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தும்.
பப்பாளி உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பப்பாளியை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்துக்கள் நிறைவாகவும் உள்ளன. அதுமட்டுமின்றி இதில் உள்ள சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி சிறந்த பலன்களை கொடுக்கும்.
கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் பசி உணர்வை கட்டுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
தர்பூசணி உடலுக்கு தேவையான நீர் சத்தை கொடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளதால் நீர்ச்சத்து நிறைந்த இந்த அற்புத பழத்தை உங்களுடைய உணவு முறையில் சேர்த்து பயன்பெறலாம்.
ஆரஞ்சு இதில் அதிக அளவு நார்ச்சத்துகளும் வைட்டமின் சி சத்துக்களும் உள்ளன. இவை உடல் எடையை குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
முலாம்பழம் இதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைப்பதற்கும் மிகவும் உதவும். அதுமட்டுமின்றி அதிக அளவு நீர்ச்சத்தும் இந்த முலாம்பழத்தில் உள்ளது.