
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இதை எல்லாம் செய்யவே கூடாது..!!
இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் ஒன்றுதான் உடல் எடை அதிகரிப்பு. பின்பு உடல் எடை குறைக்கும் போது ஒரு சிலர் செய்யும் தவறுகளால் உடல் எடை குறையாமலேயே இருக்கும். அதுமட்டுமின்றி உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஒரு சில தவறை எல்லாம் செய்யவே கூடாது அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் செய்யக்கூடாது..
தினமும் எடையை பார்க்கக்கூடாது. ஏனென்றால் தினமும் எடை பார்ப்பதன் மூலமாகவும் கூட எடை அதிகரிக்கலாம். எப்படி தெரியுமா ஒரு நாள் விடாமல் தினமும் எடையை பார்ப்பதன் மூலம் ஏதாவது ஒரு நாள் எடை குறையாமல் அப்படியே இருக்கும் போது மன அழுத்தம் உருவாகும். அப்போது உடல் எடை குறையவே இல்லை என்ற நினைத்து நாம் உடல் எடை குறைப்பதை நிறுத்த கூட நேரிடும். இதனால் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.
உணவை ஒருபோதும் குறைக்காதீர்கள். கார்போஹைட்ரேட் உணவை குறைத்து அதிக நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் புரோட்டின் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ரெடிமேட் உணவுகளை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் தான் சாப்பிட வேண்டும் நான் டயட்டில் இருக்கேன் என்று பாட்டில் பாட்டிலாக ஜூஸ் மற்றும் கூல்டிரிங்ஸ் கூடாது. குறைவான சத்துள்ள அதாவது நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வோம். கொஞ்சமாவது தான் சாப்பிட வேண்டும். அதுவும் அதில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரம் முழுக்க டயட் இருந்து விட்டு வாரத்தின் கடைசியில் எனக்கு பிடித்தால் போல் என்னவென்றாலும் நான் சாப்பிடுவேன் என்று சாப்பிட்டு விடாதீர்கள் அது உங்கள் ஒரு வாரத்தின் டயட்டையும் வீண் செய்து விடும்.