நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க நிறைய பேர் மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். ஆனால் வெந்தயக் கீரையை சாப்பிடுவதன் மூலம் மிக சுலபமாக அதை நம்மால் செய்ய முடியும். ஆகையால் இன்று வெந்தயக் கீரையை வைத்து துவையல் எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை – 2 கட்டு,
வெங்காயம் – 1,
தக்காளி – 2,
இஞ்சி – ஒரு துண்டு,
காய்ந்த மிளகாய் – 8,
உப்பு – தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் – சிட்டிகையளவு.
செய்முறை:
கீரையை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி எடுத்து தோல் நீக்கி குட்டி குட்டியாக வெட்டி வைக்க வேண்டும். தக்காளி வெங்காயம் ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு வெந்தயக்கீரை வெங்காயம் தக்காளி இஞ்சி காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
இவையெல்லாம் ஆரிய பிறகு ஜாரில் போட்டு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அந்த கலவையை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சத்தான மற்றும் சுவையான வெந்தயக் கீரை துவையல் தயார்.




