உடல் சூடு தோல் நோய் முதுகு வலி இந்த பிரச்சனைகள் வர காரணம் இதுதான்..!!

காலநிலை மாறும்போது உடல் சூடு மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட சில வழிகள் உண்டு என்றும் மருத்துவர்கள் கூறுகின்றன..

உடல் சூடு அதிகரிப்பதால் நம் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் இது தோல் தலை முடி உதிர்வு உடலில் நீர் கொப்பளங்கள் வரும் எனவே இவற்றை உணவின் மூலம் எப்படி சரி செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..

காரம் நிறைந்த மற்றும் அதிக மசாலா பொருட்கள் சாப்பிடுவது உடல் உஷ்ணத்திற்கு முக்கிய காரணமாகும் மேலும் காலநிலை மாறும் போது இது மாதிரி உடல் உஷ்ணம் ஏற்படும். அதிகம் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படலாம்…

உடல் உஷ்ணம் அதிகரித்தால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை பித்த வெடிப்பு சருமம் வறட்சி சிறுநீர் தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இவற்றை சரி செய்வதற்கு…

தேவையான பொருட்கள் :

* விளக்கெண்ணெய்
* நல்லெண்ணெய்
* குப்பைமேனி சாறு
* முடக்கத்தான் கீரை
* மூக்கிரட்டை
* முருங்கை இலை..

இவை அனைத்தையும் அரைத்து சாறு எடுத்து இவற்றை கடுக்காய், அதிமதுரம், கருஞ்சீரகம், மிலக்கரணை இவை அனைத்தையும் தனித்தனியாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும் இதை அனைத்தையும் இப்போது தைலமாக காய்ச்சி எடுக்க வேண்டும் அதற்கு ஒரு கடாயில் இவை அனைத்தையும் சேர்த்து அத்துடன் ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் அரை லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் மாதிரி மிதமான சூட்டில் வைத்து காய்ச்சி வடிகட்டி வைக்கவும் பின்னர் இதனை பயன்படுத்தலாம்..

முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த தைலத்துடன் சேர்த்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குளித்தால் உஷ்ணம் குறையும் வறட்சி நீங்கும், இதனை முகத்திற்கு பயன்படுத்தலாம் மாதவிடாய் நேரத்தில் அடிவயிற்றில் தேய்க்கலாம். கால்கள் வெடிப்பு முதுகு வலி உள்ள இடங்களில் தேய்த்து குளிக்கலாம் அதிக உஷ்ணமிருந்தால் நீராகரத்துடன் சேர்த்து மாதம் ஒருமுறை குடிக்கலாம் இருபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் குடிக்க வேண்டும் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம் குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்..!!

Read Previous

மாசி மாதம் மகத்துவம் தாலி பிரித்து கோர்க்கலாமா என்ற கேள்விக்கு பதில்..!!

Read Next

தமிழ்நாடு முழுக்க 86 ஆயிரம் நிலங்களை பட்டா வழங்க தமிழ் அரசு முடிவு செய்துள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular