
இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு உடல் சூடு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக தான் இருக்கிறது. இதனால் இவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உடல் சூடு என்பது நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல் போவதாலும் ஏற்படும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் சேரில் அமர்ந்து வேலை செய்வதாலும் இந்த உடல் சூடு ஏற்படும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் நாம் அருந்தாமல் இருப்பதாலும் உடல் சூடு என்பது ஏற்படும். உடல் சூட்டை குறைக்க நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் சூட்டை குறைக்க வெந்தயம் ஒரு மிகப்பெரிய மருந்தாக இருக்கும். வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதன் மூலம் நம் உடலில் உள்ள சூடு குறையும். மேலும் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீர்ஆவது நாம் உட்கொள்ள வேண்டும். கரும்பு ஜூஸ் குடிக்கும்போது உடல் சூடு குறையும். மற்றும் வெள்ளரிக்காய் வெங்காயம் போன்றவற்றை சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும். மேலும் இளநீர் மோர் குடிப்பது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பல வகைகள் அனைத்தையும் நாம் உட்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். எனவே ஆரோக்கியமான உணவுகளை நாம் பின்பற்றுவதன் மூலமே இந்த உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.