
உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!
தினசரி வாழ்க்கையில் நம் உடலில் ஏற்படும் சோர்வு என்பது அனைவருக்கும் இப்போது அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் உடலில் சோர்வு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். 7 முதல் 8 மணி நேரம் இடையூறு இல்லாத தூக்கம் கண்டிப்பாக வேண்டும். ஆரோக்கியமான நீர்ச்சத்து மிக்க உணவுகளை சரியான அளவில் தினமும் சாப்பிட வேண்டும். ஒவ்வொருவரும் அவரது உடலுக்கு தேவையான நீரை குடிப்பது அவசியமான ஒன்று. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் இந்த உடல் சோர்வை குறைக்க முடியும். காபி டீ போன்றவற்றை அருந்துவதை தவிர்த்தாலே சோர்வு என்பது நம் உடலில் இருந்து குறைவதை கண்கூட பார்க்கலாம். நம் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஆரோக்கியமாகவும் சோர்வு அடையாமலும் இருக்க கண்டிப்பாக தினமும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதோடு நடை பயிற்சி யோகா ஆகியவற்றை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தாலே உடலில் சோர்வு ஏற்படாமல் இருக்கும்.