
லோயா்கேம் விடுமுறைக்கு வந்த ஆயுதப்படை காவலா் உடல் நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், லோயா்கேம்ப் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அழகா்சாமி. இவருக்கு அனில்கபூா், அஜித்கபூா் என 2 மகன்கள் உள்ளனா். அனில்கபூா் (28) சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தாா்.
விடுமுறையில் சொந்த ஊரான லோயா்கேம்ப்புக்கு அந்த அணில் கபூர் உறவினா்களைச் சந்தித்து பேசிய உள்ளார், திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அனில் கபூரின் உறவினர்கள் லோயர் கேம்பில் இருந்து ஆட்டோ மூலம் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அவரின் உடலை கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது