உடல் நலமும்..!! மன நலமும்..!! வாழ்க்கையை சிறப்பாக வாழ நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

‘உடல்நலமும்,*
*மன நலமும்”*

எல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றால் பயனில்லை. அத்தகைய, மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆரோக்கியமான உடல்.*

ஆரோக்கியம்’ என்றால் என்ன? உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது…*

‘உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்று இருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’ என்கிறது..*

ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மனதளவில் மகிழ்ச்சியில்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.*

இது பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர்.*

உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மனஆரோக்கியம் குறையும்;*

அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.*

ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும்.*

தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட முடியும்.*

அப்படிப்பட்டோர் தங்கள் உணவு, துக்கம், உடற்பயிற்சிப் பழக்கம் போன்றவற்றைச் சரியாகச் செய்வார்கள்.*

ஆனால், சிகரெட் , குடி, போதைப் பழக்கத்தை தவிர்த்து விடுவார்கள். அப்படி இருந்தால் தான் தன் குடும்பத்தை சரிவர அவர்களால் வழி நடத்த முடியும்.*

சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.*

*ஆம்.,தோழர்களே.*

*இதுவரை போனது போகட்டும், இனி மேலாவது…*

*நடை பயிற்சியும், உடற்பயிற்சியும் நாள்தோறும் சரியாய் செய்வோம்.,*

*யோகா,தியானம் முறைப்படி செய்வோம்.,*

*உணவும்,ஓய்வும் முறையாக் கொள்வோம்.,*

*உறங்கும் நேரம் வகுத்துக் கொள்வோம்.,*

*முடிந்த அளவு இல்லாதவர்களுக்கு உதவுவோம்..*

*உடல்,மனநலம் பேணுவோம், வாழ்வை சிறக்கச் செய்வோம்..

Read Previous

அவசியம் படியுங்கள்.. டச்சிங்.. படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

Read Next

சமையல் ரகசியங்கள்..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular