Oplus_131072
உடல் வலுவிற்கு சத்தான கருப்பு உளுந்து அடை.., எப்படி செய்வது?
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான கருப்பு உளுந்து அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து- ½ கப்
அரிசி மாவு- 3 ஸ்பூன்
வெங்காயம்- 1
மிளகு தூள்- ½ ஸ்பூன்
சீரகம்- ½ ஸ்பூன்
பச்சைமிளகாய்- 1
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
பெருங்காயம்- ¼ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கருப்பு உளுந்தை நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் உளுந்தை வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், மிளகு, சீரகம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து மாவை வட்டமாக தட்டி எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான உளுந்து அடை தயார்.




