
கணவன் மனைவி சண்டைக்கும், பிரிவுக்கும், விவாகரத்துக்கும், திருமணம் கடந்த உறவுக்கும் மிக
முக்கிய காரணம் #தாம்பத்யம்…
திருமணமான புதிதில் தாம்பத்தியத்தில் கணவன் மனைவி இருவரும் ஆர்வமாக ஈடுபடுவார்கள் ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே தாம்பத்தியம்
கணவர் மனைவி இருவருக்கும் இடையேயான யுத்தமாக மாறும்.
காரணம்.
#கணவன் மனைவி இருவரும் செய்யும் தவறுகள் தான்.
தாம்பத்தியத்தில் கணவன் செய்யும் தவறுகள்.
●தான் ஆசைப்பட்ட நேரத்தில் எல்லாம் மனைவி தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று நினைப்பது.
●தன்னுடைய சுகத்தில் மட்டும் கவனமாக இருந்து கொண்டு மனைவியை முழுமையாக திருப்திப்படுத்தாமல் இருப்பது.
●மனைவி செய்த செயல் அல்லது பேச்சு சில நேரம் பிடிக்கவில்லை என்றால் அவளுக்கு தாம்பத்தியத்தை மறுப்பது.
●தாம்பத்தியத்தில் #மனைவி விரும்பாமல் வேகம் காட்டுகிறேன் என்று முரட்டுதனமாக நடந்து கொள்வது.
●தாம்பத்திய நேரத்தில் மனைவிக்கு பிடிக்காத தகாத வார்த்தை பிரயோகம் உபயோகிப்பது.
●வீட்டில் குழந்தைகள் / விழித்து இருக்கும் போது மனைவியை தாம்பத்தியத்திற்கு வற்புருத்துவது.
●தாம்பத்தியத்திற்கு பிறகு மனைவியோடு சில மணித்துளிகள் அணைக்காமல், அன்பாக ஆதரவாக பேசாமல் தனியே சென்று தூங்கி விடுவது.
தாம்பத்தியத்தில் மனைவி செய்யும் தவறுகள்.
●குடும்ப பொறுப்புகள் அதிகமானவுடன் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பது.
●தன்னுடைய ஆசைகளையெல்லாம் கணவர் பூர்த்தி செய்தால் தான் அவருக்கு தாம்பத்தியத்தில் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று நிர்பந்தம் விதித்திப்பது.
●உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் குண்டாகிய பின்னரும் எப்படி இருந்தால் என்ன என்று அலங்காரம் இல்லாமல் இருப்பது.
●உணவில் கணவன் விரும்பிய மட்டன் பிரியாணி, மீன்குழம்பு, பூரி, பொங்கல் என்று வித விதமாக பார்த்து பார்த்து செய்து விட்டு தாம்பத்தியத்தில் கணவன் விரும்பியவற்றை செய்ய மறுப்பது.
●தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது கணவன் கோபப்படும் படி தாம்பத்தியத்திற்கு சம்பந்தம் இல்லாமல் வீடு அல்லது வேலை அல்லது பணப் பிரச்சனை பற்றி பேசி நல்ல மனநிலையை குலைப்பது.
●கணவன் செய்த செயல் அல்லது பேச்சு சில நேரம் பிடிக்கவில்லை என்றால் அவருக்கு தாம்பத்தியத்தை மறுப்பது.
●தாம்பத்தியத்தில் சில நேரம் வேலை பளு அல்லது உடல் சூடு அல்லது மன இறுக்கம் காரணமாக கணவர்கள் முயற்சி வெற்றி பெறாத போது அல்லது விரைவில் முடிந்து விடும் போது மனைவி அதை குத்தி காட்டியோ உதாசீனப்டுத்தியோ அச்சம், படபடப்பு ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் தோல்வியுற செய்வது.
இப்படியாக கணவரும் மனைவியும் மாறி மாறி தவறுகள் செய்து
சந்தோசத்தை தர வேண்டிய இனிமையான தாம்பத்தியத்தை போர்க்களமாக மாற்றி விடுகிறார்கள்.
இதுவே அநேகமான குடும்பத்தில் பிரச்சனை பெரிதாகி சண்டைக்கும், பிரிவுக்கும், விவாகரத்துக்கும், திருமணம் கடந்த உறவுக்கும் காரணமாகிறது.
இது மாதிரி உடல் ரீதியாக கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை நேரும் அப்போது இணை கோபம் கொள்ளாமல் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டு உற்சாகப்படுத்தி ஓய்வு கொடுத்து நல்ல சூழ்நிலை மனநிலைக்கு கொண்டு வந்து மீண்டும் முயற்சிக்கலாம்.
உணருங்கள் தம்பதிகளே…
கணவன் மனைவி இருவரும் தாம்பத்தியத்தில் இணக்கமாக இருந்து சந்தோஷமாக வாழுங்கள்.
வாழ்க்கை சந்தோஷமாக வாழ்வதற்கே தவிர கடமைக்கு வாழ்வதல்ல.