
Oplus_131072
உணவில் நெய் எந்த அளவுக்கு சேர்க்க வேண்டும் தெரியுமா..?? மீறினால் என்ன ஆகும்..!!
நெய் என்பது ஆரோக்கியமான ஒன்றுதான் இருப்பினும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு எந்த வகையான உணவாக இருந்தாலும் சரி பழங்களாக இருந்தாலும் அளவாகத்தான் சாப்பிட வேண்டும். அதுபோன்றுதான் உணவில் நெய் சேர்ப்பதும். உணவில் நெய் சேர்ப்பது சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் ஒரு நாளைக்கு ஒருவர் உன்னிலிருந்து இரண்டு தேக்கரண்டி நெய் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். இது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
நெய் செரிமானத்திற்கு உதவுகிறது நெய்யில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவு உள்ளன மற்றும் நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது அது மட்டும் இன்றி சருமம் மற்றும் முடி பிரச்சனைக்கு நெய் நல்ல தீர்வு தரும். இது போன்ற நெய் சாப்பிடுவதால் பல பயன்கள் நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இருப்பினும் அதிக அளவு நெய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா. அதிக அளவு நெய் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரித்து கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அளவாக சாப்பிட வேண்டும். இதய நோய் உள்ளவர்கள் நெய்யை குறைவாக சாப்பிடுவது அவர்களின் உடலுக்கு மிகவும் நல்லது.