இந்த நவீன காலகட்டத்தில் பலரும் உணவுகளை மீதமானால் ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடியும் சூடேற்றி அடுத்த நாள் சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர். ஆனால் ஒரு சில உணவுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் நம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சிக்கன் போன்ற உணவுகளை நாம் மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. அதேபோலத்தான் முட்டை மற்றும் கீரை வகைகளை சூடேற்றி சாப்பிடவே கூடாது. காளான் மற்றும் சாப்பாடு ஆகியவற்றை சூடேற்றி சாப்பிடுவதால் நம் உடலில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடேற்றி அதை சமையல் செய்ய பயன்படுத்தினால் பெரிய அளவிலான நோய்கள் நம் உடலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சமையல் செய்து அதை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டு வந்தால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.குறிப்பாக இந்த உணவுகளை திரும்பத் திரும்ப சூடு படுத்தி சாப்பிட்டால் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் தினசரி வாழ்க்கையில் மலச்சிக்கல் குடல் நோய் செரிமான கோளாறு மற்றும் குமட்டல் ஏற்படலாம். ஆகையால் இந்த உணவுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.