
உணவு அருந்தும் முறை இதுதான்..!! முடிந்தவரை அனைவரும் இதை கடைப்பிடியுங்கள்..!!
உணவு அருந்துவதற்கு என்று சில வரைமுறைகள் உள்ளன. மற்றும் உணவு அருந்தும் முறை பற்றியும் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உணவருந்தும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சாப்பிடும் பொழுது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. மற்றும் ஒற்றை விரலை மற்றும் நீட்டிக்கொண்டு சாப்பிடக்கூடாது. சாதத்தை உருட்டி சாப்பிடக்கூடாது. அதுமட்டுமின்றி குறிப்பாக சாப்பிடும் பொழுது ஒருபோதும் பேசக்கூடாது.
கை கழுவும் பொழுது பிறர் மேல் படும்படி கையில் உள்ள தண்ணீரை உதறவை கூடாது. பந்தியில் நாம் இருக்கும் பொழுது அடுத்தவர்கள் மனது கஷ்டப்படும் படி நாம் பேசக்கூடாது. உள்ளங்கையில் சாப்பாடு ஒட்டாமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பு உணவளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தி சாப்பிடுங்கள். இதையெல்லாம் முடிந்தவரை அனைவரும் கடைப்பிடிக்க பழகுங்கள்.