உணவு வாங்கித் தராத ஊழியர் பணிநீக்கம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
சீனாவில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது சீனியருக்கு தினமும் காலை உணவு மற்றும் காபி வாங்கித் தர மறுத்ததால் தன்னை பணிநீக்கம் செய்துவிட்டதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ‘உங்களின் தனிப்பட்ட வேலைகளை செய்ய முடியாது’ எனக் கூறியதால் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே தன்னை நீக்கிவிட்டதாக லோ என்பவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்ட நிறுவனம், அந்த சீனியரை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.