
உணவை வீணாக்காதீர்கள்!
நம்ம பணத்தில் பானி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.
🍇நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.
🍓கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .
🥭ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.
🍍ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.
🍋நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள்.
🙏🏽உணவை #அன்னபூரணியாக மதியுங்கள்
பின் குறிப்பு – இதில் பெரும்பான திருமண வரவேற்புகளில் ! நாம் அமரும் முன்பே! இலையில் 90 சதவீதம் உணவுகளை நிரப்பி விடுகிறார்கள்!.
பிடித்தது, பிடிக்காதது, உடலுக்கு ஒத்து போவாவது என்று அடங்கும்! இதை திருமண ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும் நன்றிகள்!