உண்மை சம்பவம்..!! இப்போது நினைத்தாலும் கண்ணீர் வர வைக்கக்கூடிய அற்புதமான பதிவு..!!

Oplus_131072

உண்மை சம்பவம்..!! இப்போது நினைத்தாலும் கண்ணீர் வர வைக்கக்கூடிய அற்புதமான பதிவு..!!

என்னதான் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தாலும் திருமணத்திற்கு முதல் நாள் பெண்ணை அழைத்துக் கொண்டு போவதற்கு முன்பு தன் தாயிடமும் தகப்பனிடமும் ஆசீர்வாதம் வாங்கும் அந்த தருணத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் வலியும் வேதனையும் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இத்தனை வருடம் தன் வீடு தன் அம்மா தன்னுடைய அப்பா என்று வாழ்ந்த வீட்டை விட்டு போறோமே என்று அந்தப் பெண் கண்ணீர் சிந்துவாள். அந்தக் கண்ணீரைக் கண்டு தன் தகப்பன் ஒரு பக்கம் கண்ணீர் வடிக்க தன் தாய் ஒரு பக்கம் கண்ணீர் வடிப்பார்கள்.

தன்னுடைய மகள் இன்னொரு வீட்டிற்கு வாழப் போகிறாள் என்று தெரிந்தும் சந்தோஷம் பட்டும் நம் வளர்த்த பொண்ணு இனிமே நமக்கு இல்லை என்று நினைத்து கண்ணீருடன் வழி அனுப்பி வைக்கும் ஒவ்வொரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் வேதனை அவர்களுக்குத்தான் தெரியும். யாருக்குமே கண்ணீர் வடிக்காத தன் அண்ணன் தன் கூட பொறந்த தங்கச்சி எவ்வளவு சண்டை போட்டாலும் தன் தங்கச்சி வீட்டை விட்டு திருமணம் தற்காக வெளியே போகும் போது கண்டிப்பாக கண்ணீர் சிந்துவான். இதுதான் பாசம். அதற்காக திருமணத்தை உண்ணும் குறை சொல்லவில்லை. பெண்களின் நிலையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.தன்வீடு தன் அம்மா தன்னுடைய அப்பா என்று 25 வருடம் வாழ்ந்த தன் வீட்டை விட்டு வேறு ஒரு வீட்டிற்கு சென்று உடனே அவர்களையெல்லாம் தன்னுடைய உறவினர்களாக ஏற்றுக்கொள்கிறாள். தங்கச்சி திருமணத்திற்காக வெளியே செல்லும்போது அண்ணன் அழும் அந்தத் தருணம் சுற்றியுள்ள உறவினர்களையும் கண்ணீர் வர வைக்கும். இந்த மாதிரி சம்பவம் நம் தமிழ் சமுதாயத்தில் தான் அதிகமாக காணப்படும்.

Read Previous

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக்கூடாது..!! ஏன் தெரியுமா..??

Read Next

முருங்கை மருத்துவம்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular