• September 14, 2024

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்ல திடீர் தடை..!! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!! காரணம் என்ன..?

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்ல திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான உதகை, அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த பத்தாம் தேதி முதல் வருகின்ற 20-ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலை உச்சியும் சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒரு இடமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சோதனை சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் மே 22 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

டின்டர் பார்ட்னருடன் உடலுறவு..!! அந்தரங்க உறுப்பில் கிருமித்தொற்றால் கடும் அவதிப்பட்ட இளம்பெண்..!!

Read Next

பெற்றோர்களே உஷார்..!! தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular