உதவி செய்ய ஏழையாகவோ பணக்காரனாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு கால நேரம் கிடையாது..!! என்பதை உணர வைத்த பதிவு..!!

Oplus_131072

படித்ததில் பிடித்தது

பில்கேட்ஸ் கம்பிப்யூட்டர் உலகின் ஜாம்பவான் உலகின் முதல் பணக்காரனாக இருந்தபோது ஒரு தடவை இந்தியா வந்திருந்தார்..

பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர் கேட்டார்…

உங்களை விட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா?

பில்கேட்ஸ்: ஆம் ஒருவர் இருக்கிறார்..

யார் அவர்?

பில்கேட்ஸ்: பல வருடங்களுக்கு முன் நான் வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணப்பட்டேன்
நியூயோர்க் விமான நிலையம் சென்றேன்
நாளிதழ்களின் தலைப்புகளை
படித்துக்கொண்டு இருந்தேன்
நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்

ஆனால் என்னிடம் சில்லறை நாணயம் இல்லை எனவே அதை விடுத்தேன்

அப்போது!..
ஒரு கறுப்பினச் சிறுவன் என்னை அழைத்து
அந்த நாளிதழ் பிரதி ஒன்றை கொடுத்தான்
என்னிடம் சில்லறை இல்லை என கூறினேன்

அதற்கு அந்த சிறுவன்..
பரவாயில்லை இலவசமாக குடுக்கிறேன் என்றான்..

மூன்று மாதம் கழித்து நான் அங்கு சென்றேன்.
மறுபடியும் அதே கதைதான் நடந்தது…
நாளிதளை இலவசமாக கொடுத்தான்

ஆனால் நான் வாங்க மறுத்துவிட்டேன்..

அதற்கு அந்த சிறுவன்:
பரவாயில்லை வாங்குங்கள், இன்று எனக்கு கிடைத்த லாபத்தில் இருந்து தருகிறேன் என்று சொல்லி குடுத்தான்….

19வருடங்கள் கழிந்தன நான் பணக்காரன் ஆகிவிட்டேன்…

அந்த சிறுவனை மறுபடியும் காணும் ஆவல் எனக்கு மேலோங்கியது..

ஒன்றரை மாதம் தேடுதலுக்கு பின் அவனை கண்டுபிடித்துவிட்டேன்…

நான் கேட்டேன் என்னை தெரிகிறதா என்று?

ஆம் தெரிகிறது… நீங்கள் புகழ்வாய்ந்த பில்கேட்ஸ்..

பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை எனக்கு இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய்…

தற்போது நீ என்னவெல்லாம் விரும்புகிறாயோ அதை எல்லாம் உனக்கு கைமாறாக தர விரும்புகிறேன் என்றேன்..

உங்களால் அதற்கெல்லாம் ஈடுசெய்ய முடியாதே என அந்த கறுப்பு இன இளைஞன் கூறினான்

ஏன் என்றேன்? நான்

அதற்கு அந்த கறுப்பின இளைஞன்..

நான் ஏழையாக இருந்தபோது கொடுத்தேன் ஆனால் நீங்கள் பணக்காரன் ஆன பின்பே எனக்கு கொடுக்க வருகிறீர்கள்…

ஆகவே நீங்கள் எவ்வாறு அதை சரிக்கட்ட முடியும் என்றான்…

அன்றே உணர்ந்தேன் என்னை விட பணக்காரன் அந்த கறுப்பின இளைஞனே என்பதை..

கொடுப்பதற்கு நீ பணக்காரனாகவோ இல்லை பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது..

உதவுவதற்கு ஏழையாகவோ பணக்காரனாகவே நல்லநேரம் பார்த்தோ உதவவேண்டும் என்பது கிடையாது..

Read Previous

கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்..!!

Read Next

அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய பதிவு..!! பெண்களைப் பற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular