உதவி செய்வது போல் நடித்து முதியவரின் ஏடிஎம்மில் பணத்தை ஆட்டைய போட்ட இளைஞர் கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களின் ஏடிஎம் கார்டு மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பல்லடம், காங்கயம், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. இது குறித்து தாராபுரம் காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் காவல்துறையினர் அதிரடி விசாரணையில் இறங்கினார்

இந்த விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் மடவூர் புகையிலைப்பட்டி கிழக்கு தெருவை சார்ந்த பன்னீர்செல்வம் என்பவர் இந்த பணம் மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் நடித்து ஏடிஎம்யில் சென்று அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை குறி வைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களின் ஏடிஎம் கணக்கில் உள்ள பண த்தை திருடுவதை வழக்கமாய் கொண்டுள்ளது தெரியவந்தது.

முதியவர்களிடமிருந்து வாங்கும் ஏடிஎம் கார்டை அவர் வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான ஏடிஎம் கார்டு முதியவர்களிடம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  இந்த நிலையில் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம்மில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதியவர்களிடம் ஏடிஎம் கார்டு மூலம் மோசடி ஈடுபட்டு வருவதை கண்டறியப்பட்டது. கடந்த பத்து மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார். பின் அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Read Previous

நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! கையும் களவுமாய் பிடிபட்ட இளைஞர்..!!

Read Next

ஏற்காடு கோர பேருந்து விபத்து..!! டிரைவரின் லைசன்ஸ் ஐந்து ஆண்டு ரத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular