உத்திரபிரதேசத்தில் மீண்டும் கொடூரம்..!! பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம்..!! உதவிக்காக 1.5 கிலோமீட்டர் அரை நிர்வாணமாக ஓடிய இளம் பெண்..!!

மத்தியபிரதேசத்தில் பழங்குடியின பெண் ஒருவர் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் இது தொடர்ந்து அவர் உதவிக்காக 1.5 கிலோமீட்டர் தூரம் அரை நிர்வாணமாக ஓடி உதவி கேட்டு உள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள  உஜ்ஜைன் மாவட்டம், மஹாகல், தாஜ்பூர் கிராமத்தைச் சார்ந்தவர் 20 வயதுடைய பழங்குடியின பெண் . அந்த பெண்ணும் கணவரும் வேலை தேடி உஜ்ஜயின் பகுதிக்கு வந்துள்ளனர். கணவன் மனைவியாக இவர்கள் இருவரும் சிங்கேரி பகுதியை சார்ந்தவர்கள் ஆவார். இது பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கக்கூடிய பகுதியாகும். தம்பதிகள் வேலை தேடி இந்திரா நகர் பகுதிக்கு வந்த நேரத்தில் யாதவ் நகரில் வசித்து வரும் இருசக்கர வாகன ஓட்டுனர் ரத்தன் லாட் என்பவரின் மகன் ரவி இந்த தம்பதிகளுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பி உஜ்ஜைன் நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாஜ்மீர் பிஸியா கிராமத்திற்கு அவர்களை அழைத்து சென்றுள்ளார்.

வயல்வெளியில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் இவர்களை அழைத்து சென்றவர் பெண்ணை வீட்டை சுத்தம் செய்ய கூறியுள்ளார். பின் பெண்ணின் கணவரை ரவி மாளிகை சாமான்  வாங்கி வரலாம் என அழைத்து சென்றான். இவர்கள் வீட்டிலிருந்து வெளியேறியதும் ரவியின் நண்பன் இம்மா புகாரே என்பவர் என்பவரின் மகன் இம்ரான் அந்த பெண்ணை பலத்தாரம் செய்துள்ளான். ரவி பெண்ணின் கணவரை ஊரின் கடையில் விட்டுவிட்டு பெண்ணிற்கும் வீட்டிற்கு வந்து பலத்தாரம் செய்துள்ளார். கயவர்கள் இருவரும்பலத்தாரம் செய்தனர். இவர்களின் பிடியிலிருந்து தப்பி அந்த பெண்மணி அரைகுறை ஆடையுடன் உதவி கேட்டு 1.5 கிலோமீட்டர் சாலையில் ஓடி உள்ளார்.

பின் அங்கிருந்து காவல் நிலையம் சென்றவர் தனது நடந்ததை கூறியுள்ளார். முதலில் பெண் பழங்குடியின மொழியில் பேசியதால் அதிகாரிகளுக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டு இருந்தது. பின் அவர்களின் மொழி தெரிந்த காவலர் ஒருவர் விசாரணை நடத்திய பின் உண்மை வெளியே வந்தது. இதனை தொடர்ந்து இந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்தனர். இவர்கள் காவலர் தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது கால் இடறி கீழே விழுந்து எலும்புகளை முறித்துக் கொண்டுள்ளனர். இவர்கள் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் ரவி மற்றும் இம்ரான் என  அடையாளம் காணப்பட்டது.

Read Previous

ஆறுதல் கூற சென்ற இடத்தில் சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை..!!

Read Next

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்..!! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular