உத்திரபிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தைச் சேர்ந்த தேவ்பால் சிங்(52), மற்றும் அவர் மனைவி மீனா சிங் (49) இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் படான்-ததாகஞ்ச் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென டிரான்ஸ்பார்ம் கம்பத்திலிருந்து மின்கம்பிகள் அருந்து அவர்கள் மீது விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே எரிந்து இறந்தனர்.
தகவல் அறிந்த உடனே காவல்துறையினர் அப்பகுதியில் வந்து தம்பதியின் உடல்களை மீட்டு அரசு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இது மட்டுமின்றி மின்சாரம் துறையை அழைத்து அருந்த கம்பியை சரி செய்ய சொன்னனர்..!!