உனக்காக ஒன்னு பிறருக்காக உடுத்து இப்படி பழமொழிகள் கூட பல கருத்துக்களை அழகாக கூறுகிறது..!!

அழகு சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்து விடும் ஆற்றல் பெற்றது உங்கள் நிறத்துக்கும் உடல் வாகுக்கும் ஏற்ற நிறத்தில் உடை இருப்பது நல்லது…

அழகாய் இருப்பவரை அழகாய் உடுப்பவரை அழகாய் நடப்பவரை அழகாய் பேசுபவரை அழகாய் சிரிப்பவரை உலகம் நேசிக்கிறது அழகை உலகம் விரும்புகிறது. உங்களுக்கு எத்தனை வயதானால் என்ன உங்களை அழகாய் வெளிப்படுத்துங்கள் அழகாக இருப்பதும் ஒரு பண்புதான் என்கிறது உளவியல். அழகு சூழ்நிலையில் இருக்கத்தை குறைத்து விடும் ஆற்றல் பெற்றது அதனால் தான் அழகானவர்களை வரவேற்புரைகளில் விழாக்களில் மேடையில் நாம் முன்னிறுத்துகிறோம். அழகாக உடுத்திக்கொண்டு வியர்வை நாற்றம் போக நறுமணம் பூசிக்கொண்டு ஓர் இடத்திற்கு செல்லுங்கள் அப்படி செல்லும்போது போகும் வேலை பாதி முடிந்து விட்டது போல தான் அழகாக எப்போதும் இருக்க சிரிக்க முயற்சிகள் அழகாய் வெற்றி நிச்சயம். மலர்களைப் பாருங்கள் அவற்றின் மனமும் அழகும் நிரந்தரமல்ல மிகக் குறைந்த ஆயுள் கொண்டதுதான் ஆனாலும் அவற்றால் அழகாக பெண்களை கவர்ந்து விட முடிகிறது. கண்ணுக்கு மட்டும் அழகாய் தோன்றுவது உண்மையான அழகு அல்ல எது நெஞ்சை கொள்ளை கொண்டு உங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறதோ அதுவே அழகு காந்திஜியின் ஆடை ஏழை விவசாயி ஆடையை போன்று அரை ஆடை தான் ஆனாலும் அது சுத்தமாக இருந்தது உடுத்தும் முறையில் அழகு இருந்தது உனக்காக நீ உணவு அருந்த வேண்டும் பிறருக்காக நீ உடை உடுத்த வேண்டும் என்கிறது பள்ளி பாடம்..

சுத்தம் சோறு போடும் அசுத்தம் நோயில் போடும் சுறுசுறுப்பு ஆரோக்கியம் அந்தஸ்தும் கொடுக்கும் சோம்பேறித்தனம் சொங்கி இருக்கும் வறுமையை அளிக்கும் மேற்கண்ட வாசகங்களுக்கு பொருள் விளக்கம் தேவையில்லை எளிதில் புரிந்துவிடும் ஒவ்வொருவருக்கும். எனவே வாழ்க்கையில் சிலர் தோல்வியடைவதற்கும் பிறரின் கவனத்தில் நிற்காமல் போகுவதற்கும் இதுவும் ஒரு காரணமாக அமைகிறது இதனால் நாம் அனைவரும் நமக்காக உணவு சாப்பிட்டு நமக்காகவும் பிறருக்காகவும் நாம் அழகாக உடை அணிவோம்..!!

Read Previous

வாழ்க்கையே ஒரு வண்ண கோலம் தான் அந்த வண்ணக் கோலத்தை நாமும் வரைந்து பார்ப்போம்..!!

Read Next

சிந்தனையை நீங்கள் வெளியே கொண்டு வந்து விட்டால் நீங்களும் வெற்றியாளர் தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular