உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

உன்னுடைய_மரண நேரத்தில் சஞ்சலப்படாதே..!

 

உன்னுடைய இறந்துப்போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது….!

 

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்…!

 

1.உனது ஆடைகளை களைவர்

2.குளிப்பாட்டுவர்

3.புது துணி அணிவிப்பர்

4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்

5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்வர்

6.உன்னோடு கூட வரும் பலர்

உன்னை அடக்கம் செய்வதில் குறியாக இருப்பர் மற்றும் சிலர் உனது வாழ்நாளில் ஒரு முறையாவது உனக்கு நல்லதை சொல்லித்தந்து இருக்க மாட்டார்கள்.

 

7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் பிரிக்கப்படும்..

 

உறுதியாக விளங்கிக்கொள்..

 

உனது பிரிவால் உலகம் கவலைப்படாது.

 

பொருளாதாரம் தடைப்படாது.

 

உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் வருவார்.

 

உனது சொத்து வாரிஸிற்கு போய்விடும்

அந்த சொத்திற்கு உன்னிடம் கேள்வி கேட்கப்படும்..

 

நீ மரணித்தவுடன் முதலில் செல்வது உனது பெயரே!!!

 

எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி உன்னை ஏமாற்றி விட வேண்டாம்

 

உன்னைப் பற்றிய கவலை 3 பங்காக்கப்படும்..

 

1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்

பாவம்..

 

2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்..

 

3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைப்படுவர்

 

மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

 

உன்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்

மறுமை

 

உன்னை விட்டும் நீங்கியது

1.அழகு

2.சொத்து

3.ஆரோக்கியம்

4.பிள்ளைகள்

5.மாளிகை

6.மனைவி……

 

உனது ஜீவனுக்கு எதனை தயாரித்து வைத்துள்ளாய்…..?

Read Previous

கெளரவம்.. இன்றைய அருமையான சிறுகதை.. படித்து பாருங்க.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

அம்மாவின் அதே கைப்பக்குவத்தில் வீட்டு மசாலாக்களை மட்டுமே பயன்படுத்தி அருமையான மட்டன் குழம்பு ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular