
ஒரு கடினமான பாறையை
உடைக்க… நீ
ஒரு சிறு ஆலமர விதையை
தூவு…
ஒரு தத்துவமான வாழ்க்கையை
உருவாக்க.. நீ
ஒரு சிறு நெருப்பாக
தீக்குச்சிக்குள் ஒளிந்துகொள்..
ஒரு வண்ணமயமான வெளிச்சம்
கொண்டு வர… நீ
ஒரு சிறு மூக்குத்தி இருளாய்
புன்னகை…
ஏன்.. இன்னும்
ஒரு சிறு கல்லாயிருக்கும் கடவுளுக்கு
உயிர் கொடுக்க..நீ
உளியாய் அடிகளை தாங்குகிறாய்..
ஒரு அவமானமாய் உன்னைத்தீண்டும்
அன்புக்கு முன்..
ஒரு சிறு மஞ்சள் கயிற்றால் …நீ…
உணர்வுகளை மூட்டைகட்டி வைக்கிறாய்..
நீ என்னென்ன செய்தாய் என்பதை… மறந்து போனாயா…
சொல்கிறேன் கேள்..
ஒரு இன்பமான பூமி செய்ய..
ஒரு சிறு உடலுக்குள்
நீ…
பல உயிர்களை உயிர்த்திருக்கிறாய்..
அடியே..அடி அடியே..
உன் மேல் விழும்
ஒவ்வொரு அடியும் உளியே..
உன் அடி வலியே..
உலகம் குருடோ விழியேன்…
உன்னால் தான் பெண்ணே..
பேராசை மண்ணானது..
மண்ணாளும் ஆசையும்
உனக்காகத்தான் உண்டானது..
பெண்ணில்லா சாமிகள்
ஆபாசமானது…
ஆசை பாசம் என்பதே
பெண்ணியமானது…
ஆடைக்குள்
ஆணென்ன பெண்னென்ன
அத்தனையும் உயிரென்றது…
அத்தனை உயிர்களுக்கும்
அம்மாவாய்.. நீதானே
ஒவ்வொரு அணுவிலும் இருந்தது..
இயந்திரங்கள் போல
இல்லை…அம்மா இயற்கை…
இலக்கணங்கள் போல
இல்லை..அன்பு இயற்கை…
இலகுவான வாழ்க்கையில்
இரட்சிக்க கடவுளை படைத்து…
கடவுளை காப்பாற்ற
அம்மாவை
அடிமை செய்தது தான்..
ஆணின் வெற்றி..
அத்தனை வெற்றிக்கும்
காரணமாய் இருந்து…
அடிமையாய் வாழ்வது தானா
இனியும் உன் பக்தி…பெண்ணே..
உன் வெற்றியை
உலகம் கொண்டாடட்டும்…
ஓய்வறியா பெண்ணினமே…
எழு உயிர்தெழு..
இனி உன் உணர்வுகள் தான்
உலகாகட்டும்…
உன்னை நீ ஆளும்
காலம் மலரட்டும்…
படித்ததில் பிடித்தது…