உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் கீழே இறங்கி வந்த போது கூட்டத்தினர் அனைவரும் அவரிடம் ஆசி வாங்க முந்தியடித்து சென்றுள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக தான் இந்த சம்பவம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதோடு உயிரிழந்தோரின் 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் கல்வி செலவினை அரசே ஏற்கும் என்றும் உத்திர பிரதேச முதல்வர் தெரிவித்தார். யார் இந்த ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா என பார்ப்போம். சுராஜ் பால் மற்றும் நாராயணன் சங்கர் ஹரி ஆகிய இயற்பெயர் கொண்ட இவரை இவரின் ஆதரவாளர்கள் போலே பாபா என்று அழைத்து வருகின்றனர். ஏற்கனவே இவர் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தனது உயிரிழந்த தனது வளர்ப்பு மகளை உயிர்த்தெழுவதாக மாந்திரிகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2000 ஆண்டு ஆக்ராவில் போதைப்பொருள் மற்றும் மாந்திரீக தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த போலே பாபா. மேலும் இடுக்காட்டில் புதைக்கப்பட்டுள்ள பிணங்களை தோன்றியதற்காக போலே பாபாவின் ஆதரவாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.