Oplus_131072
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஏலக்காய்..
ஏலக்காயின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் டையூரிடிக் பண்புகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. இது நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது கொலஸ்டரால் அளவைக் குறைக்க உதவும். கொலஸ்டரால் அளவு அதிகரிப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது இறுதியில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கிறது. கொலஸ்டரால் குறையும் போது, ரத்த அழுத்த அளவையும் குறைக்க உதவுகிறது.
ஏலக்காய் ஒரு டையூரிடிக் ஆகும், அதாவது இது உங்கள் சிறுநீரின் அளவை அதிகரிக்கிறது. மேலும் உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் பொட்டாசியத்தை நீக்குகிறது.
இது ரத்த நாளங்களைத் தளர்த்த உதவுகிறது, இது இறுதியில் உங்கள் ரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது..




