உயர் ரத்த அழுத்தத்தால் அவதியா.? இந்தப் பாட்டி வைத்திய முறையை ட்ரை பண்ணி பாருங்க.!!

இன்று இயந்திரமயமான இந்த உலகில் பெரும்பாலான ஒரு உயர் ரத்த அழுத்த நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். வேலைபளு, தூக்கமின்மை, முறையற்ற உணவு பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகின்றன இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிக அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பதால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது.

அதிக அளவு மருந்துகள் இல்லாமல் பாட்டி வைத்திய முறையின்படி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றிற்கு உணவு கட்டுப்பாடு நம்முடைய பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது. எளிய கை வைத்திய முறையில் உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று இப்பதிவில் காணுபோம்.

தேன் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது, ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர ரத்த அழுத்தம் கட்டுபடும். இதே போல் கேரட் மற்றும் தேன் கலந்து குடித்தாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அவற்றுடன் நீர் கலந்து நன்றாக அரைத்து பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், அதே போல் இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து குடித்தாலும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒரு கிளாஸ் அளவு நீருடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், பின் அதனை நன்கு வடிகட்டி இவற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்த உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

Read Previous

அடடே,! இனி தர்பூசணி விதைகளை குப்பையில் போட மாட்டீர்கள்.!! அசர வைக்கும் மருத்துவ குணங்கள்.!!

Read Next

“3 நாள் ஸ்கூலுக்கு போகல., ஒரு மாதிரி பாத்தாங்க”.. சிறுவயதில் வெளியான மார்பிங் போட்டோ.!! கதிகலங்கிய சீரியல் நடிகை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular