உயிரில்லாமல் சடலாக கிடந்த தாய் குரங்கு..!! கதறி கதறி அழும் குட்டி குரங்கு..!!

சாலை விபத்தில் தாய் குரங்கு உயிரிழந்த நிலையில், அருகில் குட்டி குரங்கு ஒன்று அமர்ந்து அழுதுள்ள சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த தாய் குரங்கு:

உலகில் தாய்பாசம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது ஆகும். அது மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் தாய்ப்பாசத்தினால் அரங்கேறும் போராட்டம் பல தருணங்களில் கண்களில் கண்ணீர் சிந்த வைக்கின்றது.

அதிலும் தாயின் இழப்பு என்பது மிகப்பெரிய சோகமான நிகழ்வு. மனிதர்களாக இருந்தாலும் சரி, மிருகங்களாக இருந்தாலும் சரி, தாயின் இழப்பு தாங்கமுடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. மிருகங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில் வேமாக வந்த கார் மோதியதில் தாய் லங்கூர் குரங்கு ஒன்று உயிரிழந்துள்ளது. தாய் உயிரற்ற நிலையில் கிடப்பதை அவதானித்த குட்டி குரங்கு அருகில் இருந்து அழுதுள்ள சம்பவம் காண்பவர்களின் இதயத்தினை கசக்கிப்பிழியும் வகையில் அமைந்துள்ளது.

குட்டி குரங்கு தாய் குரங்கின் முகத்தைப் பிடித்துக் கொண்டு கதறி கதறி அழுதுள்ளது. இக்காட்சியினை, இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர், இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு என் நினைவில் இருக்கும். அசாமில் ஒரு கோல்டன் லங்கூர் சாலையில் படுகொலை செய்யப்பட்டது. தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் அதன் கையில் இருக்கும் குட்டி தன் தாயை எழுப்புகிறது. குட்டி குரங்கைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Read Previous

சேலம் செவ்வாயபேட்டையில் காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை..!!

Read Next

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular