உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல – ஐசிஎம்ஆர்..!!

இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விளக்கம் அளித்துள்ளது. சமீப காலமாக இளம் வயது உயிரிழப்புகளில் 10% பேரின் உயிரிழப்புக்கு குடும்ப பின்னணி காரணமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27% உயிரிழப்புக்கு புகையிலை, போதை பொருள் பழக்கமும், 27% உயிரிழப்புக்கு மது பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் உணவுப் பழக்க வழக்கமும், குடும்பத்தில் சிறுவயதில் உயிரிழக்கும் மரபணு போன்ற காரணங்களால் தான் திடீர் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Read Previous

சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை..!!

Read Next

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular