
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் தொழில்நுட்பம் தான் என்று ஆகிவிட்டது. நம் வாழ்க்கையோடு இணைந்து பயணித்துக் கொண்டிருப்பது தொழில்நுட்பம். உலகமே கைக்குள்ளே அடக்கம் என்பது போல எல்லாமே நம் உபயோகிக்கும் ஃபோனில் இருக்கிறது. பணம் கூட எடுத்து செல்ல தேவையில்லை. போன் இருந்தால் போதும் நாம் விரும்பியவற்றை வாங்கலாம் பண பரிவர்த்தனை செய்யலாம்.
தற்போது புதிதாக ஏஐ தொழில்நுட்பம் என்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதரால் செய்ய முடியாததையும் இது செய்கிறது. அந்த அளவுக்கு உலகம் தொழில்நுட்பத்தில் வேகமாக செல்கிறது. ஆனாலும் என்னதான் தொழில்நுட்பம் முன்னேறி சென்றாலும் அதனால் பாதிப்புகள் இருக்க தான் செய்கிறது. அது போல தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.
googleளின் செயலிகளில் முக்கியமானது தான் google map. நம் முன்னோர் காலத்தில் வழி தெரியவில்லை என்றால் போகும் வழியில் நிற்கும் மனிதர்களையோ கடைகளிலோ வழி கேட்டு செல்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் யாருமே தேவையில்லை போனும் google மேப்பும் இருந்தால் போதும் google மேப்பை வைத்து லொகேஷன் போட்டுக் கொண்டே எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் நம்மால் எளிதால் செல்ல முடியும். ஆனால் இந்த கூகுள் மேப்பை பயன்படுத்தி வழி தவறி ஆபத்தான இடங்களில் சென்று சிக்கியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதுபோல சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஒரு இளைஞர் google மேப்பை பார்த்துக்கொண்டே சதுப்பு நில சகதியில் நன்றாக மாற்றிக்கொண்டார். வெகுநேரமாகிய அக்கம் பக்கத்தினர் முயற்சி செய்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. உடனே மீட்பு பணியினரை உதவிக்கு அழைத்து அவரை மீட்ட காட்சி அப்போது இணையத்தில் பரவி நம்மை பதற வைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை முழுதாக நாம் நம்பி விடக்கூடாது என்பது போல ஒரு சில சம்பவங்கள் இதுபோன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது.