
உருண்டை மோர்க்குழம்பு செய்முறை
தேவையான பொருட்கள் :
* கடலைப்பருப்பு கால் கப்
* துவரம்பருப்பு கால் கப்
* சோம்பு கால் டீஸ்பூன்
* மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
* கடுகு கால் டீஸ்பூன்
* வெந்தயம் கால் டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு கால் டீஸ்பூன்
* சீரகம் கால் டீஸ்பூன்
* மிளகு கால் டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 1
* தேங்காய் துருவல் கால் கப்
* பச்சை மிளகாய் 2
* இஞ்சி ஒரு துண்டு
* மோர் 200 மில்லி
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* தேங்காய் எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, தண்ணீர் விட்டு நீர்க்க கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து உப்பு, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஒவ்வொரு உருண்டைகளாகப் போடவும்.
எல்லாம் சேர்ந்துக் கொதித்ததும், மோரில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, குழம்புடன் சேர்த்து, கொதித்து வரும்போது இறக்கவும்.தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றவும்.