உருளைக்கிழங்கை வைத்து சுவையான முறையில் வெஜ் குருமா செய்து இட்டிலி தோசை இடியாப்பம் சப்பாத்தியென இவற்றிற்கு சுவை மிகுந்த சைட் டிஸ் உருளைக்கிழங்கு வெஜ் குருமாவை பார்ப்போம்..
உருளைக்கிழங்கு வெஜ் குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு கால் கிலோ, பீன்ஸ் 100 கிராம், கேரட் 100 கிராம், பச்சை பட்டாணி கால் கப், பெரிய வெங்காயம் ரெண்டு, தக்காளி ஒன்று, பச்சை மிளகாய் 4, மல்லித்தூள் ஒன்றரை டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், சோம்பு ஒரு ஸ்பூன், பட்டை இரண்டு, லவங்கம் நாலு, கசகசா அரை ஸ்பூன், கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி அளவு, உப்பு தேவைக்கேற்ப, முதலில் எண்ணெய் தேவைக்கு ஏற்ப ஊற்றி கடுகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும், உருளைக்கிழங்கு வெஜ் குருமா செய்முறை : பட்டாணியுடன் உப்பு சேர்த்து குக்கரில் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும் வெங்காயம், கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும், வெறும் கடாயில் கசகசா வறுத்து எடுத்துக் கொள்ளவும் வறுத்த கசகசாவை மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும், தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும் தேங்காய் சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் வெங்காயம், பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்த கலவையை ஊற்றி நன்கு கிளறவும், அதனுடன் அழைத்த தக்காளி விழுதை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும் நன்கு வதங்கி வாசனை வந்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு கிளறவும், அதனுடன் உப்பு மிளகாய் தூள் மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும், இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும் சுவையான ஆரோக்கியம் நிறைந்த உருளைக்கிழங்கு வெஜ் குருமா தயார். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் இட்லி சப்பாத்தி தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்..!!




