உலகின் உயரமான, குள்ளமான பெண்கள் சந்திப்பு..!! கின்னஸ் உலக சாதனை நாள்..!!
கின்னஸ் உலக சாதனை நாளின் 20ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், உலகின் உயரமான பெண்ணான துருக்கியின் ருமெய்சா கெல்கி மற்றும் உலகின் உயரம் குறைவான பெண்ணான இந்தியாவின் ஜோதி அம்கே ஆகியோர் கின்னஸ் சாதனை ஐகான்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், லண்டனில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அங்கு, ஆராய்ச்சியாளரான 7 அடி உயரம் கொண்ட ருமெய்சா ஆங்கிலத்திலும், 2 அடி உயரம் கொண்ட இந்தியாவின் ஜோதி அம்கே ஹிந்தியிலும் உரையாடினர்.