
உள் நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது என உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நைஜர் நாட்டில் ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது. பின்னர் ராணுவம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதனைக் குறித்து ராணுவ ஜெனரல் அப்துல் ரகுமானே தொலைக்காட்சியில் கூறிய போது, மக்கள் மீதும் நம் நாட்டின் மீதும் பாதிப்பை ஏற்படுத்த காத்திருக்கும் அனைவரையும் தோற்கடிக்க நாட்டு மக்களை ஒன்றிணைய அழைக்கிறோம். அண்டை நாடுகள் நைஜரின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு நாங்கள் அமைதியான சூழலை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.
இந்த ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து அண்டை நாடான நைஜீரியா நைஜீருக்கு மின் விநியோகத்தை நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.