• September 24, 2023

உலக புகழ்பெற்ற பசுபதிநாத் கோவிலில்புகைப்படம் எடுத்தால் 2000 ரூபாய் அபராதம்..!! கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ..!!

புகைப்படம் எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் – பசுபதிநாத் கோவில் நிர்வாகம் அதிரடி.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பாக்மதி ஆற்றங்கரை பகுதியில் உலக புகழ்பெற்ற பசுபதிநாத் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்தக் கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதந்தது தடையை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வத்தில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை இன்று ஆரம்பமாகியுள்ளது. இதற்கிடையே கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு நூறு சதவீதம் கட்டண சலுகை..!! ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவிப்பு…!!

Read Next

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி…? வாங்க பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular