
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘பிங்க் ஆட்டோ திட்டம்’ கொண்டுவர உள்ளதாக, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். இந்நிலையில், நாளை (08.03.2025) மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், இத்திட்டம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுய தொழில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டதாகும். அதேபோல், இத்திட்டத்திற்கு தமிழக அரசால் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தம் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் மூலம் நாளை பிங்க் ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.