உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும் பாயாசத்திற்கும் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்.

உலர்ந்த திராட்சை பழத்தில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது இதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் நல்ல உடல் வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும் ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்கு பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தை கொடுத்து வருவது நல்லது.தினசரி உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்துக்கு பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும் எலும்புகள் உறுதியாக இருக்கும். பற்கள் கெட்டிப்படும். பல் சம்பந்தமான எந்த கோளாறும் ஏற்படாது.

இதயம் பலத்துடன் இருக்கும் இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும். பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்கு பிறகு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும். தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகமாக உள்ளது பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதைவிட தினமும் 10 உலர் திராட்சை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

Read Previous

இல்லறம் இனிக்க எட்டு பொன் விதிகள்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

பிரவுன் ரைஸ் அல்லது வெள்ளை அரிசி இதில் எது சிறந்தது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular