இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைவருக்குமே தங்களை அழகாகவும் உடல் எடையை சீராகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருக்கும். ஆனால் ஒரு சில காரணங்களால் இதை நடக்காமல் உடல் எடை அதிகரித்து விடும். ஏன் திடீரென்று உடல் எடை அதிகரித்து விட்டது. இதற்கு என்னதான் செய்ய வேண்டும் என்று பலரும் புலம்புவார்கள். உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் இதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தீர்வு தான் இந்த உலர் திராட்சை தண்ணீர். உணவில் திராட்சை தண்ணீரை சேர்த்து தினமும் அதை உட்கொள்வதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். திராட்சை நீர் என்பது திராட்சையையும் ஒரு டம்ளர் தண்ணீரையும் எடுத்துக் கொண்ட அந்த தண்ணீரில் திராட்சையை போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதோடு உடல் எடையும் குறையும். கையளவு உலர் திராட்சையில் 29 கிராம் கார்போஹைட்ரேட் ஒரு கிராம் புரதச்சத்து 21 கிராம் சர்க்கரை 108 கலோரிகள் ஒரு கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.
இந்த உலர் திராட்சை தண்ணீர் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
முதலில் இரண்டு கப் தண்ணீரில் 150 கிராம் உலர் திராட்சைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு இரவு முழுவதும் தண்ணீர் சேர்த்து இதனை ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி எடுத்து இந்த தண்ணீரை குடிக்கலாம். உங்களுக்கு சற்று சுவை வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாறையும் இதனுடன் கலந்து கொள்ளலாம். இதைக் குடித்த பிறகு அரை மணி நேரத்திற்கு எந்த ஒரு உணவையும் நாம் அருந்தக்கூடாது. இதனை நாம் தினசரி குடித்து ஃபாலோ பண்ணுவதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.




