உளுத்தம் பருப்பில் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு பார்த்தால் அதனின் ருசி நம் வாயை விட்டு நீங்காது நீங்களும் உளுத்தம் பருப்பில் கொழுக்கட்டை செய்து சுவைத்து பாருங்கள்…
உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு கால் கிலோ, உளுத்தம் பருப்பு மூன்று கப், காய்ந்த மிளகாய் ஐந்து, உப்பு தேவைக்கேற்ப எண்ணெய், தேவைக்கேற்ப, கடுகு அரை ஸ்பூன், பச்சை மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, கருவேப்பிலை ஒரு கொத்து, உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம், முதலில் உளுத்தம் பருப்பை ஊறவைத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும், பின்பு அரைத்த உளுந்தை இட்லி குக்கரில் வேக விடவும் பின் கடாயில் எண்ணெய் விட்டு வேக வைத்த உளுத்தம் பருப்பு இட்லி லேசாக வதக்கி உதிர்க்கவும், மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும், பிறகு தாளித்ததில் உதிர்த்து வைத்த உளுத்தம் பருப்பு மாவை கொட்டி கிளறி தேங்காய் சேர்த்து கிளறவும், பச்சரிசி மாவை வறுத்து ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி சூடான தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும், பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும், தட்டிய மாவின் நடுவே பூரணத்தை வைத்து மாவை மடித்து ஓரங்களை ஒட்டவும் பிறகு இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும், இப்போது சுவையான சூடான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை தயார், ஒருமுறை செய்து சாப்பிட்டால் ஒவ்வொரு முறையும் உங்கள் நாக்கு உளுத்தம் பருப்பு கொழுக்கட்டையின் சுவையை தீண்டிடும் இன்னொரு முறை செய்து சாப்பிட..!!




