உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு கிடைத்தால் ரகசிய தகவல் வசமாக சிக்கிய நான்கு பேர் பின்னணியில் அதிர்ச்சி தகவல்

புதுச்சேரியில் இருந்து மினி லாரி மற்றும் காரில் மதுபானங்கள் கடத்தி வருவதாக கள்ளக்குறிச்சி காவல்துறையினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவலர், உளுந்தூர்பேட்டை காவலர் இன்று காலை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய ஈடுபட்டபோது லாரி நிற்காமல் அதிவேகமாய் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர், லாரி மற்றும் காரில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடினார். நான்கு பேர் காவல் துறையில் சிக்கிக் கொண்டதால் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னர் சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்த விசாரணையில் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டில்கள் மொத்த மதிப்பு 30 லட்சம் ஆகும். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை காவல் துறையினர் தீவிரமாய் தேடி வருகின்றனர்.

Read Previous

மோடி கன்னியாகுமரி சென்று நாடகம் போடுகிறார்..!! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்..!!

Read Next

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!! அனைத்து மின்சார ரயில்களிலும் கழிவறை வசதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular