உளுந்தூர்பேட்டை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு அஞ்சலி..!! கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி.!!

தேமுதிக கட்சியின் நிறுவனரும், தலைவரும், தமிழ் நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாய் நேற்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் இயற்கை எய்தி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், பல திரையுலக நட்சத்திரங்களுக்கு அறிமுகம் கொடுத்து ஏழைகளின் வாழ்க்கையில் எம்.ஜி.ஆருக்கு பின் வாழ்க்கையில் விளக்கேற்றிய நாயகனாகவும் இருந்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த். துணிச்சலான பேச்சு, கம்பீரமான குரல், மக்களுக்கான அரசியல் பயணத்தை தொடங்கி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் வரை பதவியில் வகித்த கேப்டன் விஜயகாந்த் தன்னை நம்பிய திரைத்துறை மற்றும் பொது மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம்.

இவரின் மறைவு இன்று தமிழகத்தையே சோகத்திற்கு உள்ளாக்கி உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விஜயகாந்தினை அறிந்த பலரும் தங்கள் ஊர்களில் பொது இடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை நகரிலும் அனைத்து கட்சியினர் சார்பில் விஜயகாந்த் புகைப்படத்தை கையில் வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. பலரும் விஜயகாந்தின் திருவுருவப்படம் முன்பு தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அந்த சமயம் அங்கு வந்த மூதாட்டி ஒருவர் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு அவரின் திரு உருவப்படம் முன்பு தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும் அவர் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு அழுதார்.

https://www.facebook.com/100004911556094/videos/885959862972818/

Read Previous

ஏரி மண் கொள்ளையால் துயரம்..!! ஏரியில் குளிக்கச்சென்ற 2 சிறார்கள் பரிதாப பலி.!! பெற்றோர்களே கவனம்.!!

Read Next

“உனக்கு டீ ஒரு கேடா”?.. கணவனின் கண்களில் கத்தரிக்கோலால் குத்திய மனைவி..!! ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular